தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது: பிரேமலதா கருத்து

சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது: பிரேமலதா கருத்து

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்காது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பி.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல், டிசம்பர் பருவமழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல், சொத்து வரி, மின்கட்டண உயர்வை திரும்ப பெறுதல், காவிரி தண்ணீர் பிரச்சினைக்கு ராசிமணலில் அணை கட்டுதல் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம்.