தொடர் மழையால் 2 மாதங்களுக்குப் பிறகு மூல வைகையில் நீர்வரத்து: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

நீரின்றி வறண்டு கிடந்த மூலவைகையில் 2 மாதத்துக்குப் பிறகு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மூல வைகை நீரை நம்பியுள்ள உள்ளாட்சி கிராமங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது

தொடர் மழையால் 2 மாதங்களுக்குப் பிறகு மூல வைகையில் நீர்வரத்து: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

கண்டமனூர்: நீரின்றி வறண்டு கிடந்த மூல வைகையில் 2 மாதத்துக்குப் பிறகு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மூல வைகை நீரை நம்பியுள்ள உள்ளாட்சி கிராமங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான வெள்ளிமலை, அரசரடி, இந்திரா நகர், புலிக்காட்டு ஓடை, பொம்முராஜபுரம், காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர் மூல வைகையாக உருவெடுக்கிறது. இந்த நீர் அம்மச்சியாபுரம் எனும் இடத்தில் முல்லைப் பெரியாறுடன் இணைந்து வைகை அணைக்குச் செல்கிறது. கடந்த 2 மாதமாக போதிய அளவு மழையில்லாததால் மூல வைகை வறண்டே காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த லேசான மழையால் மூல வைகையின் முகத்துவாரத்தில் மட்டும் நீரோட்டம் இருந்தது.