ஆண்டிப்பட்டியில் தொடர் மழை: பருவத்துக்கு முன்பே காலிஃபிளவர் அறுவடை

ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் காலிஃபிளவர் விளைச்சல்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றை, 20 நாட்கள் முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டியில் தொடர் மழை: பருவத்துக்கு முன்பே காலிஃபிளவர் அறுவடை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் காலிஃபிளவர் விளைச்சல்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றை, 20 நாட்கள் முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளான சில்வார்பட்டி, சேடபட்டி, டி.புதூர், அணைக்கரைப்பட்டி, புள்ளிமான் கோம்பை, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலிஃபிளவர் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆற்றங்கரையோர நிலங்களில் சுமார் 50-க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காலிஃபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.‌