தொலைத்தொடர்பு கம்பி வடங்களை துண்டிப்போர் மீது கடும் நடவடிக்கை: ரயில்வே எச்சரிக்கை
ரயில் போக்குவரத்துக்கு உதவிடும் தொலைத்தொடர்பு கம்பி வடங்களைத் துண்டிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மதுரை: ரயில் போக்குவரத்துக்கு உதவிடும் தொலைத்தொடர்பு கம்பி வடங்களைத் துண்டிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ரயில்களை பாதுகாப்பாக இயக்க, ரயில் பாதை அருகே பூமிக்கு அடியில் செல்லும் தொலைதொடர்பு கம்பி வடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் இந்த தொலை தொடர்பு கம்பி வடம் ஒரு ரயில் பாதையில் ,ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களை இயக்குவதை தடுப்பதற்கும், ரயில் வருவதற்கு முன்பாக குறித்த நேரத்தில் கடவுப் பாதையை (ரயில்வே கேட்) மூடுவதற்கும் பயன்படுகிறது.