ரூ.250 கோடியில் திமுக ‘தேர்தல் தீபாவளி’ கொண்டாடியதாக தமிழக பாஜக விமர்சனம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளிக்காக திமுகவினர் ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளிக்காக திமுகவினர் ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், சனாதன தர்மத்தை ஒரு பக்கம் எதிர்த்து பேசிக்கொண்டு, இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து வரும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக முழுக்க தீபாவளி பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது.