நானே தலைவர்... நானே முதல்வர்! - ரங்கசாமியின் 13 வருட அரசியல் பாணி!
இப்பொதெல்லாம் கட்சி தொடங்கும் முன்பே பதவிகளுக்கு ஆட்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் கட்சி தொடங்கி வருஷம் 13 ஆகியும் இன்னமும் கட்சிப் பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இப்பொதெல்லாம் கட்சி தொடங்கும் முன்பே பதவிகளுக்கு ஆட்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் கட்சி தொடங்கி வருஷம் 13 ஆகியும் இன்னமும் கட்சிப் பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தான் இந்த சரித்திர சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் தேர்தலுக்குத் தேர்தல் கட்சி தாவுவோர் எண்ணிக்கை கின்னஸ் லெவல். முன்பெல்லாம் இங்கு தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் தான் இருக்கும். ஆனால், அதை உடைத்து மாநிலக் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முடியும் என்று வெற்றிக்கொடி நட்டவர் ரங்கசாமி. காங்கிரஸ் முதல்வராக இருந்து நீக்கப்பட்ட ரங்கசாமி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை 2011-ல் தொடங்கினார். அடுத்த இரண்டு மாதத்திலேயே தேர்தலைச் சந்தித்து ஆட்சியை பிடித்து பலரது புருவத்தை உயரவைத்தார்.