நினைக்க தெரிந்த மனங்களின் மறக்கமுடியாத பாடகர் பி.சுசிலா!
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள் துவங்கி அப்பகுதி மக்களின் சுகதுக்கங்களில் ஒன்றென கலந்திருந்தது பேண்டு இசைக் குழுக்கள்.
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள் துவங்கி அப்பகுதி மக்களின் சுகதுக்கங்களில் ஒன்றென கலந்திருந்தது பேண்டு இசைக் குழுக்கள். ஓர் இசைக்குழுவில் 12 முதல் 15 பேர் வரை இருப்பர். கிளாரிநெட் தான் இந்த பேண்டு இசைக் குழுக்களின் பிரதானமான இசைக்கருவி. இதற்கு இணையாக சாக்ஸபோன், ட்ரெம்பெட், இபோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் சப்போர்டிங்காக இசைக்கப்படும்.
இவை அனைத்துமே மேற்கத்திய இசைக்கருவிகள். தாளத்தைப் பொறுத்தவரை சைட் டிரம், டோல், பேஸ் டிரம், டாம் டாம், மொராகோஸ் இடம்பெற்றிருக்கும். தஞ்சை பேண்டு இசைக்குழுக்களின் தனிச்சிறப்பே ஒவ்வொரு இசைக்குழுவிலும் ஒரு தவில் இசை கலைஞர் இடம்பிடித்திருப்பர். ஒரு காலத்தில் இரண்டு தவில் இசை கலைஞர்கள் வாசித்ததும் உண்டு. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பேண்டு இசைக் குழுக்களும், கலைஞர்களும் தனித்துவமானவர்கள்.