பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை நோட்டீஸ்
பள்ளிகளை முறையாக ஆய்வுசெய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பள்ளிகளை ஆண்டாய்வு செய்யவும், பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்தவும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குறைந்தபட்சம் 12 பள்ளிகளை பார்வையிடவும், 2 பள்ளிகளில் ஆண்டாய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.