பவுர்ணமி, வார கடைசி நாட்களில் சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நவம்பர் 15 (நாளை) பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.6, 17 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூருக்கு நவ.15, 16-ம் தேதிகளில் 705 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூருவுக்கு 81 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 350, கோயம்பேட்டில் இருந்து 11, மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகள் என மொத்தம் 1,152 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.