பிரபல செல்போன் விற்பனை நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார்: உரிமையாளர் வீட்டில் வருமானவரி சோதனை
தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரபல செல்போன் விற்பனை நிறுவனம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது
சென்னை: தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரபல செல்போன் விற்பனை நிறுவனம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மின்னணு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட மின்னணு பொருட்களுக்கு சரியாக கணக்குகாட்டாமல், வரி ஏய்ப்பு செய்ததாக அந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.