பிராட்வே பேருந்து நிலைய சீரமைப்பு பணி: 168 கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி நடவடிக்கை

அங்கு 9 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்​துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்​கப்பட உள்ளது. அதேபோல் பிராட்​வே​யில் உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்​கப்​பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.

பிராட்வே பேருந்து நிலைய சீரமைப்பு பணி: 168 கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி நடவடிக்கை

சென்னை: சென்னை​ பிராட்வே பேருந்து நிலை​யத்தை ஒருங்​கிணைந்த போக்கு​வரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்​துள்ளது. இத்திட்​டத்​துக்கு ரூ.823 கோடி ஒதுக்​கப்பட்​டுள்​ளது. இப்பணி​களுக்காக பிராட்வே பேருந்து நிலை​யத்​தில் உள்ள கட்டிடங்கள் முழு​வதுமாக இடிக்​கப்பட உள்ளன.

பின்னர் அங்கு 9 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்​துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்​கப்பட உள்ளது. அதேபோல் பிராட்​வே​யில் உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்​கப்​பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. பணிகள் நடைபெறும் வரை ராயபுரத்​தில் தற்காலிக பேருந்து நிலை​யத்தை அமைப்​ப​தற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.