நெல்லையில் நீடிக்கும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

நெல்லையில் நீடிக்கும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகரப் பகுதிகளில் இன்று (டிச.14) காலை முதலே மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று காலையில் மழையின் அளவு குறைந்துள்ளது. 118 அடி கொள்ளளவுள்ள மணிமுத்தாறு அணையில் தற்பொழுது 91 அடி தண்ணீர் உள்ளது. 143 அடி கொள்ளளவுள்ள பாபநாசம் அணையில் 82 அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.