“புதுச்சேரி அரசும், துணைநிலை ஆளுநரும் இணக்கமாக உள்ளோம்” - அமைச்சர் நமச்சிவாயம் கருத்து 

புதுச்சேரி அரசு, பல்கலைக்கழகம், கல்வி மேம்பாட்டு கேந்திரம் ஆகியவை இணைந்து நவீனக் கல்வி, பண்பாடு, இந்திய அறிவு முறையின் மறுமலர்ச்சி, கல்வியில் தாய்மொழி வழி கல்வியை செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பைக் கொண்டாடும் நோக்கில் தேசிய ஞானக் கும்பம் நிகழ்சியை கடந்த 21-ம் தேதி முதல் 3 நாட்கள் நடத்தியது.

“புதுச்சேரி அரசும், துணைநிலை ஆளுநரும் இணக்கமாக உள்ளோம்” - அமைச்சர் நமச்சிவாயம் கருத்து 

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, பல்கலைக்கழகம், கல்வி மேம்பாட்டு கேந்திரம் ஆகியவை இணைந்து நவீனக் கல்வி, பண்பாடு, இந்திய அறிவு முறையின் மறுமலர்ச்சி, கல்வியில் தாய்மொழி வழி கல்வியை செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பைக் கொண்டாடும் நோக்கில் தேசிய ஞானக் கும்பம் நிகழ்சியை கடந்த 21-ம் தேதி முதல் 3 நாட்கள் நடத்தியது.

3-வது நாளான சனிக்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேசிய கல்வி கொள்கை தொடர்பாக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.