லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தூத்துக்குடி, ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேர் கைது
லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்த தருவைகுளம், ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்த தருவைகுளம், ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
அரபிக் கடலின் தென்பகுதியில் உள்ள லட்சத்தீவின் தலைநகராக கவரட்டித் தீவு திகழ்கிறது. இங்கு கடலில் குறிப்பிட்ட பகுதி வரை மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை கொச்சியில் இருந்து 350 கடல் மைல் தொலைவில், கவரட்டி தீவு அருகே ஒரு விசைப்படகு மீன்பிடித்துக் கொண்டிருந்தது.