புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட உள்ள ரேஷன் கடைகள்
புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளாக மூடியுள்ள ரேஷன் கடைகள் நாளை திறக்கப்பட்டு, தீபாவளிக்கு இலவச சர்க்கரை, அரிசி விநியோகம் தொடங்குகிறது.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளாக மூடியுள்ள ரேஷன் கடைகள் நாளை திறக்கப்பட்டு, தீபாவளிக்கு இலவச சர்க்கரை, அரிசி விநியோகம் தொடங்குகிறது.
புதுச்சேரியில் ரேஷன்கடைகளில் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தரமற்ற அரிசி வழங்குவதாக 2016ல் புகார் எழுந்தது. அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய தடை விதித்தார். இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசின் உத்தரவுப்படி நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கியில் செலுத்தும் நடைமுறையை கொண்டுவந்தார். இதன்படி கடந்த 2019ல் ரேஷன் கடைகள் முழுமையாக மூடப்பட்டன.