புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தம் - காரணம் என்ன?

ஆளுநர் தொடக்கி வைத்து இரண்டு ஆண்டுகளாகியும் புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கோயில் சொத்துகள் அபகரிக்கப்படுவதை தடுக்க கோயில் சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியமாக அரசு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது

புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தம் - காரணம் என்ன?

புதுச்சேரி: ஆளுநர் தொடக்கி வைத்து இரண்டு ஆண்டுகளாகியும் புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கோயில் சொத்துகள் அபகரிக்கப்படுவதை தடுக்க கோயில் சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியமாக அரசு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

புதுச்சேரியை வெறும் கேளிக்கை சுற்றுலாவுக்கான இடம் என்ற எண்ணமே பலருக்குண்டு. ஆனால், வேதபுரி என்ற முந்தைய பெயருடைய புதுச்சேரியில் கோயில்கள், சித்தர் ஆலயங்கள், மடங்கள் ஏராளம் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 243 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இக்கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட இந்து சமய அறநிலையத் துறை நிறுவப்பட்டுள்ளது.