“பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து காவல் துறையினருக்கு வழிகாட்டுதல் வழங்கிடுக” - தமிழக பாஜக
காவல் துறையினருக்கு, பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும், என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
சென்னை: “காவல் துறையினருக்கு, பொதுமக்களை வீடியோ எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். காவல்துறையினர் அவசியம் இல்லாமல் அத்துமீறி வீடியோ எடுக்கும்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மோதல் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். காவல்துறையினர் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அத்துமீறல்களை, பாதிப்புகளை தான் வீடியோ எடுக்க வேண்டும்,” என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவலர்கள் மக்களின் தோழர்களாக செயல்பட தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு, தமிழக அரசு மனிதவள மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும். சமீபத்தில் காவலர்களுக்கும் மது போதையில் இருந்த இருவருக்கும் நடந்த மோதல், காவல்துறையின் கண்ணியத்தை பெருமையை தியாகத்தை சிதைக்கும் வகையில் இருந்தது. இதற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.