“கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். ஏனெனில்...” - சீமான் விவரிப்பு

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது

“கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். ஏனெனில்...” - சீமான் விவரிப்பு

தென்காசி: “கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே கூட்டணி எனக்கு சரியாக வராது. தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (நவ.13) நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: “கூட்டணி என்பது எனக்கு சரிப்பட்டு வராது. நான் பெரிய கனவு கொண்டுள்ளேன். ஒரு நேர்மையற்றவன் நாட்டு மக்களையும் நேர்மையற்றவன் ஆக்குகிறான். ஒரு தலைவன் தான்தான் இதை செய்வேன் என இருக்க கூடாது. எனக்கு பின்னால் வரும் தலைமுறை இதை செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். எங்கள் காலத்தில் வென்றால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் இன்னொரு தலைமுறைக்கு கையளித்து செல்வோம்.