அறநிலையத் துறை சார்பில் ரூ.190.40 கோடியில் 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான, 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.42.75 கோடியிலான 27 முடிவுற்ற திட்டப்பணிகள், கட்டிடங்களை திறந்து வைத்தார்.

அறநிலையத் துறை சார்பில் ரூ.190.40 கோடியில் 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.42.75 கோடியிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகள், கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், அழகர்கோயில், கள்ளழகர் கோயிலில் ரூ.49.25 கோடி மதிப்பில், பெருந்திட்ட வளாக மேம்பாடுமற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோயிலில் ரூ.44.57 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணி, குபேரலிங்கம் அருகில் வணிக வளாகம் கட்டுதல், கோபுரங்கள் மற்றும் விமானங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி மற்றும் ஏழு தீர்த்த குளங்களை சீரமைக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.