ப்ளடி பெக்கர் Review: கவினின் காமெடியும், சென்டிமென்டும் கைகொடுத்ததா?
தந்தையின் சொத்துக்காக வாரிசுகள் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிச்சைக்காரன் ஒருவன் வந்து சிக்கினால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ப்ளடி பெக்கர்’.
தந்தையின் சொத்துக்காக வாரிசுகள் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இடையில் பிச்சைக்காரன் ஒருவன் வந்து சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ப்ளடி பெக்கர்’.
ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றி பிச்சை எடுக்கிறார் கவின். அவருடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான். இப்படியான சூழலில், அன்னதானம் போடுவதாக கூறி, பெரிய அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவின். சாப்பிட்டு முடித்த கையுடன் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் கவினை கவர்ந்திழுக்க, மறுபுறம் அதிலிருக்கும் ஆபத்தும் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. அது என்ன ஆபத்து? அதிலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பது மீதிக்கதை.