“மருத்துவர் பாலாஜி மீது குற்றம்சாட்ட திமுக, அதன் சார்பு ஊடகங்கள் முயற்சி” - ஹெச்.ராஜா கண்டனம்

மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, திமுக மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

“மருத்துவர் பாலாஜி மீது குற்றம்சாட்ட திமுக, அதன் சார்பு ஊடகங்கள் முயற்சி” - ஹெச்.ராஜா கண்டனம்

சென்னை: “மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, திமுக மற்றும் அதன் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க திமுக சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது தேவையற்றது, தவிர்க்கப்பட வேண்டும்” என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர ஹெச்.ராஜா இன்று (நவ.15) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, திமுகவினர் புரோட்டா கடைக்குச் சென்று புரோட்டா உண்பார்கள், காசு கொடுக்கமாட்டார்கள். காசு கேட்டால் அடிப்பார்கள். மகளிர் அழகு நிலையத்துக்குச் சென்றாலும் இதே நிலைதான். திமுகவினருக்கு இதுதான் வேலை. இந்த அரசாங்கத்தின் உளவியல் பொதுமக்களுக்கு விரோதமாக இருக்கிறது.