“ராஜதுரை படத்தை முன்பே பார்த்திருந்தால்…” - ‘தி கோட்’ ஒற்றுமை குறித்து வெங்கட் பிரபு பகிர்வு
“தி கோட் படம் வெளியான பின்பு தான் நான், ‘ராஜதுரை’ படத்தை பார்த்தேன். முன்பே பார்த்திருந்தால் இன்னும் சிறப்பாக ‘தி கோட்’ படத்தை இயக்கியிருக்கலாம்” என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை: “‘தி கோட்’ படம் வெளியான பிறகு தான், அந்தப் படம் கிட்டத்தட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘ராஜதுரை’ படத்தின் கதை என்பது தெரியும். முன்பே தெரிந்திருந்தால் அந்தப் படத்தை பார்த்து இன்னும் கொஞ்சம் சிறப்பாகவே ‘தி கோட்’ படத்தை இயக்கியிருப்பேன்” என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வெளியான முதல் நாளே, இது விஜயகாந்த் நடித்த ‘ராஜதுரை’ படத்தின் கதை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. தற்போது இது தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசியுள்ளார். அண்மையில் கல்லூரி ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “உண்மையில் எனக்கு ‘தி கோட்’ படம் வெளியான பிறகு தான், அந்தப் படம் கிட்டத்தட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘ராஜதுரை’ படத்தின் கதை என்பது தெரியும்.