ராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் சீர்மிகு பொறியாளர் விருது வழங்கும் விழா
கட்டுமானம், கட்டமைப்பில் சிறப்பான முறையிலும், தனித்துவத்துடனும் செயலாற்றி வரும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’, ‘திறன்மிகு பொறியாளர் விருது - 2024’ ஆகியவை வழங்கப்படவுள்ளன.
சென்னை: கட்டுமானம், கட்டமைப்பில் சிறப்பான முறையிலும், தனித்துவத்துடனும் செயலாற்றி வரும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’, ‘திறன்மிகு பொறியாளர் விருது - 2024’ ஆகியவை வழங்கப்படவுள்ளன.
சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நாளை (டிச. 5) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.