விழுப்புரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

விழுப்புரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிச.10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.