தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு: கடலூரில் 50+ குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிப்பு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடலூரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு: கடலூரில் 50+ குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிப்பு

கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடலூரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 1,70,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.