ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து கடந்த 2021-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.