ரூ.45 கோடி பட்ஜெட்…வெறும் ரூ.60 ஆயிரம் வசூல்: ‘தி லேடி கில்லர்’ பட தோல்விக்கு காரணம் என்ன?
ரூ.45 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘தி லேடி கில்லர்’ பாலிவுட் திரைப்படம் வெறும் 60,000 ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆனால், இந்தப் படம் யூடியூப்பில் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ரூ.45 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘தி லேடி கில்லர்’ பாலிவுட் திரைப்படம் வெறும் 60,000 ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆனால், இந்தப் படம் யூடியூப்பில் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி வெளியான இந்திப் படம் ‘தி லேடி கில்லர்’. அர்ஜுன் கபூர், பூமி பட்னேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை அஜய் பெகல் இயக்கியிருந்தார். டி-சிரீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. 45 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் படுதோல்வியை தழுவியது. இதன் ஓடிடி உரிமையை முதலில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால், படத்தின் பொருட்செலவு அதிகமானதால் கிளைமாக்ஸ் காட்சியை படக்குழு படமாக்கவில்லை. எடிட்டிங்கில் சரி செய்து படத்தை வெளியிட்டு விட்டார்கள். இதனால் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளமும் ‘தி லேடி கில்லர்’ படத்தை திரும்ப அளித்துவிட்டது.