ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பகுதி-2 தொடங்கப்படும்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பகுதி 2 விரைவில் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கூறினார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பகுதி 2 விரைவில் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கூறினார்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியங்களில், ரூ.2.16 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள், ரூ.13 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கே.எம்.சரயு, எம்எல்ஏ மதியழகன் முன்னிலை வகித்தனர்.