வங்கக் கடலில் வரும் 23-ல் உருவாகிறது ‘டானா’ புயல்: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து அக்டோபர் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளது.