“விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா?” - உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

“தவெக தலைவர் விஜய்யை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து கூறுகிறாரா?” என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

“விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா?” - உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

சென்னை: “தவெக தலைவர் விஜய்யை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து கூறுகிறாரா?” என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முத்துராமலிங்க தேவர் மகிழ்ச்சியடையும் வகையில் திட்டங்களைக் கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆன்மிகவும் தேசியமும் இரு கண்கள் என முத்துராமலிங்க தேவர் கூறினார். ஆனால், ஆன்மிகமும், அரசியலும் கலக்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். தேசியத்தையும் ஆன்மிகத்தையும் ஒரு சேர கொண்டு சென்றதால் தான் முத்துராமலிங்கனாருக்கு வெற்றி கிடைத்து. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும். ஆன்மிகமும், அரசியலும் இணைந்தே தான் இருக்கும்.