விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் 

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் 

விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகள் வழங்காமலும், அடையாள அட்டை வழங்கும் முகாம்களை சரிவர நடத்தாமலும் தங்கவேல், மெத்தனப் போக்குடன் இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.