விவாதமாக வேண்டுமா பிரபலங்களின் விவாகரத்துகள்?

திரையுலக பிரபலங்கள் இடையே விவகாரத்து நிகழ்வுகள் நடந்தால்போதும், உடனே சோஷியல் மீடியாக்களுக்கு றெக்கை முளைத்துவிடுகின்றன. அதைப் பற்றி கருத்துச் சொன்னால்தான் அன்றைய பொழுதே போனது மாதிரி நெட்டிசன்களுக்கு ஆகிவிடுகிறது.

விவாதமாக வேண்டுமா பிரபலங்களின் விவாகரத்துகள்?

திரையுலக பிரபலங்கள் இடையே விவகாரத்து நிகழ்வுகள் நடந்தால்போதும், உடனே சோஷியல் மீடியாக்களுக்கு றெக்கை முளைத்துவிடுகின்றன. அதைப் பற்றி கருத்துச் சொன்னால்தான் அன்றைய பொழுதே போனது மாதிரி நெட்டிசன்களுக்கு ஆகிவிடுகிறது. விவாகரத்து தொடர்பான தகவல்கள் காதுக்கு எட்டியவுடன் தங்களுடைய அறிவுரைப் புராணங்களை ஆரம்பித்து விடுகிறார்கள்.

உருக்கமான பதிவுகளால் மட்டுமல்லாமல் யார் மீது தவறு என்று பட்டிமன்றமும் நடத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் ஜட்ஜ்மென்டே எழுதி, இதற்கு இவர்தான் காரணம் என்று பிரபலத்தின் முழு தகவல்களையும் இழுத்து வந்து கட்டுக்கதைகளையும் எழுதுகிறார்கள். சம்பந்தப்பட்ட பிரபலங்கள், விவாகரத்து தங்களின் தனிப்பட்ட விவகாரம், அதற்கு மதிப்பளியுங்கள் என வேண்டுகோள் விடுத்த பிறகும் அதை பொதுவிவாதமாக மாற்றும் போக்குக் குறைந்தபாடில்லை.