ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளம்: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு

ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளம்: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 55 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளநீரால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. இந்நிலையில், சாத்தனூர் அணை நிரம்பியதால் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், மற்ற காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சங்கராபரணி ஆறு, தொண்டி ஆறு, மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.