“ஆவணப் படங்கள், குறும்படங்கள் திரையிடுவது கடினமாகியுள்ளது” - இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன்
ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடுவது கடினமாகியுள்ளது என்று இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் தெரிவித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை, இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திரைப்பட இயக்கம் இணைந்து புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடக்கும் 12-வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.6) துவங்கியது.
புதுச்சேரி: ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடுவது கடினமாகியுள்ளது என்று இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் தெரிவித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை, இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திரைப்பட இயக்கம் இணைந்து புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடக்கும் 12-வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.6) துவங்கியது.
தொடக்க நிகழ்வில் இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் பேசுகையில், “ஆவணப்படங்கள், குறும்படங்கள் அரசை விமர்சிப்பதால் தற்போது திரையிடல் எளிதாக இல்லை. கடந்த பத்து ஆண்டுகளை விட திரையிடல் கடினமாகியுள்ளது. முன்பு திரைப்பட விழாக்களில் திரையிட சென்சார் தேவையில்லை. ஆனால், இந்திய படங்களுக்கு தற்போது சென்சார் தேவை. அதே நேரத்தில் வெளிநாட்டு படங்களுக்கு தேவையில்லை. ஆவணப்படம், குறும்படம் எடுப்பது கடினம். அதை விட திரையிடுவது மிக கடினம்” என்று குறிப்பிட்டார்.