இந்திரா சௌந்தர்ராஜனின் ‘அமானுஷ்ய’ கதைகளுக்குப் பின்னால்... - நினைவலை பகிரும் எழுத்தாளர் கு.கணேசன்

“தனது கதைகளுக்கான அமானுஷ்யங்களுக்கான தேடலில், இந்திரா சௌந்தர்ராஜன் அவை சார்ந்த நூல்களை, பெரும்பாலும் தேடுவதோ, படிப்பதோ இல்லை. இந்து மதத்தின் ஆன்மிக நெறிகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தவர்” என்று எழுத்தாளர் கு.கணேசன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திரா சௌந்தர்ராஜனின் ‘அமானுஷ்ய’ கதைகளுக்குப் பின்னால்... - நினைவலை பகிரும் எழுத்தாளர் கு.கணேசன்

மதுரை: “தனது கதைகளுக்கான அமானுஷ்யங்களுக்கான தேடலில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவை சார்ந்த நூல்களை, பெரும்பாலும் தேடுவதோ, படிப்பதோ இல்லை. இந்து மதத்தின் ஆன்மிக நெறிகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தவர்” என்று எழுத்தாளர் கு.கணேசன் நினைவு கூர்ந்துள்ளார்.

பிரபல எழுத்தாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தரராஜன் (66) மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திரா செளந்தர்ராஜன் மறைவை ஒட்டி மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் கு.கணேசன் பகிர்ந்தவை: “பா(ர்த்தசாரதி) சௌந்தரராஜன், இந்திரா சௌந்தர்ராஜன் ஆக உருவாகக் காரணமானவர், எழுத்தாளர் மகரிஷி ஆவார்.