உண்மைச் சம்பவ அடிப்படையில் உருவான ‘ஃபயர்’

தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராகும் படம், 'ஃபயர்'. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவ அடிப்படையில் உருவான ‘ஃபயர்’

தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராகும் படம், 'ஃபயர்'. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார்.

சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவா வசனம் எழுதியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.முரளி ராமசாமி, டி.சிவா, பாண்டியராஜன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.