ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகளை விரைவில் தொடங்க திட்டம்

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகள் இந்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சில் பிரதான சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகளை விரைவில் தொடங்க திட்டம்

சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகள் இந்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சில் பிரதான சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல்கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது.