கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான வகையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை இம்மாதம் 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான வகையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை இம்மாதம் 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2022 ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு, பள்ளிக்குச் சொந்தமான உடைமைகள் சூறையாடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவும் விசாரணை நடத்திவருகின்றனர்.