கிருஷ்ணகிரி அணையில் இருந்து 6,792 கனஅடி நீர் திறப்பு: 9-வது நாளாக 3 மாவட்ட மக்களுக்கு  எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 6,792 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 9-வது நாளாக 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 6,792 கனஅடி நீர் திறப்பு: 9-வது நாளாக 3 மாவட்ட மக்களுக்கு  எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 6,792 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 9-வது நாளாக 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும், கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2,324 கனஅடியாக இருந்தது. அது இன்று (அக்.24) காலை 6 மணியளவில் 3,438 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாவட்டத்தில் பெய்த கனமழையால், இன்று காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.45 அடியாக உள்ளதால், அணையில் இருந்து விநாடிக்கு 6,792 கனஅடி தண்ணீர், 3 பிரதான மதகுகள் மற்றும் 3 மணல் போக்கி சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.