குறைந்த கட்டணம்... விரைவான பயணம்! - மக்களின் வரவேற்பை பெற்ற ‘பைக் டாக்சி’ திட்டம்
சொந்தமாக ஒரு உணவகத்தை கூட நடத்தாத ஒரு நிறுவனத்தால் இன்று உணவு டெலிவரி செய்ய முடிகிறது. சொந்தமாக ஒரு தங்கும் விடுதி கூட வைத்திராத ஒரு நிறுவனத்தால், தேசிய அளவில் தங்கும் விடுதி முன்பதிவு செய்து வழங்கும் சேவையை வழங்க முடிகிறது.

இச்சேவைகள் அனைத்தும் நாம் யாரையும் நாடி செல்லாமல், நம் கைக்குள்ளேயே ஸ்மார்ட் போன்கள் வடிவில், இணையதளம் வழியாக நொடிப்பொழுதில் பெற முடிகிறது. இதற்கு தொழில்நுட்ப வளரச்சி தான் முக்கிய காரணம். உலக அளவில் நடந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்வியலை வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பம் வழியாக தான் தற்போது அடித்தட்டு மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் பைக் டாக்சி வந்திருக்கிறது.