சூரியனார்கோவில் ஆதீன பிரச்சினை: 18 மடாதிபதிகள் கூடிப் பேசி முடிவெடுக்க வலியுறுத்தல்
சூரியனார்கோவில் ஆதீன பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் உள்ள 18 ஆதீன மடாதிபதிகள் கூடிப் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
கும்பகோணம்: சூரியனார்கோவில் ஆதீன பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் உள்ள 18 ஆதீன மடாதிபதிகள் கூடிப் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக திருவடிக்குடில் சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சூரியனார்கோவில் ஆதீனம் பிரச்சனை போல் வேறு எந்த ஆதீனத்திலும் நடந்து விடக் கூடாது. மேலும், ஆதீன நிர்வாகத்தை, அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் மற்ற ஆதீனங்களின் நிலை கேள்வி குறியாகும்.