சூரி படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷமி ஒப்பந்தம்

சூரி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சூரி படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷமி ஒப்பந்தம்

சென்னை: சூரி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூரி. இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதில் சூரிக்கு நாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், சூரியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விரைவில் இப்படத்தின் பூஜையை திருச்சியில் நடத்தி படப்பிடிப்பையும் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.