சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும், 7 மாவட்டங்களில் நாளையும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.