தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574  கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் அமைச்சர் கோரிக்கை

தமிழக சுற்றுலாத்​துறை அமைச்சர் ஆர்.ராஜேந்​திரன் நேற்று டெல்​லி​யில் மத்திய சுற்றுலா, கலாச்சா​ரத்​துறை அமைச்சர்  கஜேந்​திரசிங் செகாவத்தை சந்தித்​துப் பேசினார்.  

தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574  கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் அமைச்சர் கோரிக்கை

சென்னை: தமிழக சுற்றுலாத்​துறை அமைச்சர் ஆர்.ராஜேந்​திரன் நேற்று டெல்​லி​யில் மத்திய சுற்றுலா, கலாச்சா​ரத்​துறை அமைச்சர் கஜேந்​திரசிங் செகாவத்தை சந்தித்​துப் பேசினார்.

தமிழக அரசின் சிறப்பு பிரதி​நிதி ஏகேஎஸ் விஜயன், திமுக எம்.பி. திருச்சி சிவா மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்​துறை செயலர் பி.சந்​திரமோகன், சுற்றுலாத்​துறை இயக்​குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்​தனர். அப்போது அமைச்சர் ராஜேந்​திரன், தமிழகத்​தின் பல்வேறு சுற்றுலா மேம்​பாட்டுப் பணிகளுக்கு ரூ.4573.53 கோடி வழங்க வேண்​டும் என்று மத்திய அமைச்​சரிடம் வலியுறுத்​தினார். இதுதொடர்பாக மத்திய அமைச்​சரிடம் அவர் அளித்த மனுவின் விவரம்: ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்​டத்​தின்​கீழ், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்​லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலா பயணி​களுக்கான வசதிகளை மேம்​படுத்​தும் திட்​டத்​துக்கு ரூ.30 கோடி​யும், நீலகிரி பைக்​காரா இயற்கை சுற்றுலா தல மேம்​பாட்டு திட்​டத்​துக்கு ரூ.28.3 கோடி​யும் ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.