தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை ; படகு ஓட்டுநர்கள் மூவருக்கு சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை ; படகு ஓட்டுநர்கள் மூவருக்கு சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கன்,சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.