“தி.மலையில் ஓராண்டுக்குள் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்” - உதயநிதி உறுதி

திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் ஓராண்டுக்குள் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும், என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

“தி.மலையில் ஓராண்டுக்குள் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்” - உதயநிதி உறுதி

திருவண்ணாமலை: “திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் ஓராண்டுக்குள் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்,” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1,875 ஊராட்சி மன்றங்களுக்கு ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் விழா மற்றும் 803 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடியில் வங்கி கடனுதவி வழங்கும் விழா திருவண்ணாமலையில் இன்று (அக்.19) காலை நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வரவேற்றார். விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கடனுதவி வழங்கி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.