“திருமாவளவன் முதல்வராகக் கூடாது என்று எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன்” - சீமான்
உள்ஒதுக்கீட்டை எதிர்த்ததால் திருமாவளவன் முதல்வராகக் கூடாது என எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன். 2 முறை தோல்விடையந்த அவர் மத்திய அமைச்சராகும்போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா என்ற உணர்வு, உரிமை, உறவில் கூறுகிறேன், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கரூர்: “உள்ஒதுக்கீட்டை எதிர்த்ததால் திருமாவளவன் முதல்வராகக் கூடாது என எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன். 2 முறை தோல்விடையந்த அவர் மத்திய அமைச்சராகும்போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா என்ற உணர்வு, உரிமை, உறவில் கூறுகிறேன்,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி கலந்தாய்வுக் கூட்டம் கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (அக்.21) நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெண்ணெய்மலையில் இனாம் நில உரிமை மீட்பு போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் இதற்கு, கரூர் நகர போலீஸார் அனுமதி மறுத்தனர். மேலும் வெண் ணெய்மலை பகுதியில் திரண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட மக்களை போலீஸார் கலைந்து போக அறிவுறுத்தினர். இதையடுத்து, கரூரில் தான் தங்கியருந்த ஹோட்டலுக்கு தன்னைச் சந்திக்க வந்த அந்த மக்களை சீமான் சந்தித்துப் பேசினார்.