திருவள்ளூரில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.   சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது

திருவள்ளூரில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்.14) இரவு முதல் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை, சராசரியாக 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இதில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் கன மழையாகவும், ஜமீன் கொரட்டூரில் லேசான மழையாகவும், தாமரைப்பாக்கம், பூண்டி, திருவள்ளூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்துள்ளது.