திரை விமர்சனம்: லக்கி பாஸ்கர்
பம்பாயில் வசிக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), வங்கி ஒன்றின் காசாளர். இளம் மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), சகோதரி, சகோதரன் மற்றும் அப்பாவுடன் வசிக்கும் அவருக்குக் கடன் மேல் கடன்.
பம்பாயில் வசிக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), வங்கி ஒன்றின் காசாளர். இளம் மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), சகோதரி, சகோதரன் மற்றும் அப்பாவுடன் வசிக்கும் அவருக்குக் கடன் மேல் கடன். நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அவர், தனக்கு புரமோஷன் கிடைக்கும் என நம்புகிறார். அது கிடைக்காமல் போக, நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு, வேறு முடிவை எடுக்கிறார். அது அவருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது. அதில் இருந்து மீண்டு சாதாரண பாஸ்கர், லக்கி பாஸ்கர் ஆனாரா என்பது படம்.
1992-ல் நடக்கிறது கதை. பங்குசந்தை மூலம் பல கோடிகளை அள்ளிய உண்மைச் சம்பவ நிதி மோசடியை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. அந்த மோசடிக்கு வங்கிகள் எப்படி துணையாக இருந்தன என்பதைப் பேசுகிறது இந்தப் படம். துல்கரின் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம், தெளிவான திரைக்கதையோடு நம்மை ஈர்க்கிறது.