தீபாவளிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்
தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என மொத்தம் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சிகிச்சை வார்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் சார்பில் மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.